உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டைய எகிப்தின் தொல்பொருட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைய எகிப்தில் கிமு 3450 முதல் கிமு 1325 முடிய கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களில் சிறப்பானவைகள் கீழ்கண்டவாறு குறிக்கப்பட்டுள்ளது.

கெபல் எல்-அராக் கத்தி, கிமு, 3450
வேட்டைக்காரர்கள் கற்பலகை
நார்மெர் கற்பலகையின் முன்பக்கக் காட்சி
நார்மெர் கற்பலகையின் பின்பக்கக் காட்சி
  1. கெபல் எல்-அராக் கத்தி நக்காடா II காலம் – ஜெர்சியப் பண்பாடு - கிமு 3450
  2. போர்க்கள கற்பலகைமூன்றாம் நக்காடா காலம் - செமைனியப் பண்பாடு - கிமு 3,200 – கிமு 3,100
  3. வேட்டைக்காரர்கள் கற்பலகை - மூன்றாம் நக்காடா காலம்
  4. நார்மெர் கற்பலகைஎகிப்தின் முதல் வம்சம் - கிமு 3100
  5. கூபு கப்பல் - நான்காம் வம்ச மன்னர் கூபு என்பவர் கிமு 2500 ஆண்டில் இரா எனும் சூரியக் கடவுளுக்காக தேவதாரு மரத்தால் கட்டப்பட்ட பெரிய தெப்பம் ஆகும்.
  6. பலெர்மோ கல்பண்டைய எகிப்தைக் ஆண்ட எகிப்தின் முதல் வம்ச (கிமு 3150 – கிமு 2890) பார்வோன்கள் முதல் ஐந்தாம் வம்ச (கிமு 2392 – கிமு 2283) பார்வோன்களின் பெயர்கள் வரையும், அவர்களின் ஆட்சிக் காலத்தையும் குறித்துள்ள கல் ஆகும்.
  7. பாபிரஸ் - முதல் வம்சத்தினரின் ஆட்சிக் காலத்தில் (கிமு 3150 - கிமு 2686) நைல் ஆற்றின் கழிமுகத்தின் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளை கூழ் செய்து காகிதம், காலணிகள் தரை விரிப்பு, கயிறு மற்றும் கூடைகள் தயாரித்தனர்.
  8. மம்மி & பிரமிடு - பழைய எகிப்து இராச்சியக் காலத்தில் (கிமு 2686 - கிமு 2181) பிரமிடுகள் கட்டப்பட்டு, இறந்த அரசகுடும்பதினரின் உடலை மம்மியாக்கி அடக்கம் செய்யும் பழக்கம் தோன்றிய்து. பழைய எகிப்து இராச்சியக் காலத்தில் (கிமு 2686 - கிமு 2181) பழைய எகிப்து இராச்சியக் காலத்தில் (கிமு 2686 - கிமு 2181) பிரமிடுகள் கட்டப்பட்டு, இறந்த அரசகுடும்பதினரின் உடலை மம்மியாக்கி அடக்கம் செய்யும் பழக்கம் தோன்றியது.
  9. கல் சவப்பெட்டி - இதில் மம்மி வைக்கப்படும்
  10. கேனோபிக் ஜாடிகள் - மம்மியின் இதயம் தவிர்த்த முக்கிய உள் உடற்பாகங்கள் வைக்கப்படும் குடுவைகள்
  11. உசாப்தி - மம்மியுடன் வைக்கப்படும் சிறு களிமண் சிற்பங்கள்
  12. கல் வண்டு - கல் சவப்பெட்டியில் மம்மி பாதுகாப்பிற்காக இருக்கும்.
  13. ஓரசு கடவுளின் கண் - மம்மிகளின் ஈமச்சடங்கின் போது பயன்படுத்தப்படும் பதக்கம் போன்ற ஓரசு கடவுளின் கண்கள் வடிவில் இருக்கும்.
  14. அன்கு - பண்டைய எகிப்தியக் கடவுள்கள் மற்றும் பார்வோன்கள் கையில் இருக்கும் சிலுவை வடிவ தாயத்து போன்றது.
  15. சென் மோதிரம் - பண்டைய எகிப்தியக் கடவுள்கள் கையில் பற்றி இருக்கும் வளையல் போன்றது.
  16. குறுங்கல்வெட்டு - எகிப்திய மன்னரின் பெயர், பெற்றோர் பெயர், ஆட்சிக் காலம் குறித்த கல்வெட்டு
  17. கனவு கற்பலகை - புது இராச்சியத்தை கிமு 1401-இல் ஆண்ட பதினெட்டாம் வமசத்தின் 8-ஆம் மன்னர் நான்காம் தூத்மோஸ், கீசாவின் பெரிய ஸ்பிங்சின் இரு கால்களுக்கிடையே நிறுவிய கல்வெட்டுப் பலகையாகும்.
  18. அமர்னா கடிதங்கள் - புது எகிப்து இராச்சியாத்தின் ஆட்சியாளர்களுக்கும், பண்டைய அண்மை கிழக்கின் கானான் மற்றும் பாபிலோன் போன்ற சிற்றரசர்களுக்கும் இடையே நடந்த தொடர்பாடல்களின் தொகுப்புகள் கொண்ட கல்வெட்டாகும்.
  19. துட்டன்காமன் முகமூடி - புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்சத்தின் இறந்த 13-வது பார்வோன் துட்டன்காமன் (கிமு 1334 - 1325) மம்மியின் முகத்திற்கு மேல் அணிவிக்கப்பட்ட நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட தங்கத்திலான மரண முகமூடியாகும்.
  20. இரண்டாம் ராமேசஸ் சிலை - புது எகிப்திய இராச்சியத்தை 66 ஆண்டுகள் ஆண்ட 19வது வம்சத்தின் மூன்றாவது மன்னர் இரண்டாம் ராமேசேசின் (ஆட்சிக் காலம் கிமு 1279 – கிமு 1213) சிவப்பு கருங்கல் சிலையாகும். இது 11 மீட்டர் உயரமும், 80 டன் எடையும் கொணடது.
  21. மெனப்தா கல்வெட்டு - பார்வோன் மெர்நெப்தா கானான் தேசத்தவர்களையும்; பிலிஸ்தியர்களையும் வெற்றி கொண்டதற்கான கல்வெட்டு. இக்கல்வெட்டின் 27வது வரியில் யாசிர் என்று இஸ்ரேலிய மக்களை குறித்துள்ளது.
  22. எலிபென்டைன் பாபிரஸ் மற்றும் பானையோட்டுக் குறிப்புகள் - கிமு 5-ஆம் நூற்றாண்டு முதல் கிமு 4-ஆம் நூற்றாண்டு வரை

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]